பாட்டு முதற்குறிப்பு அகராதி

1. திருவிசைப்பா

4. கோயில்

45.

சிறப்புடை அடியார் தில்லைச்
   செம்பொன்அம் பலவற் காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ்
   உறைப்பர்சே வடிநீ றாடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
   இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                    (11)

திருச்சிற்றம்பலம்
 


45. சிறப்பு-யாவரினும் உயர்ந்து நிற்கும் மேன்மை. உறைப்பு-உறுதி.
‘சிறப்புடை அடியாராகிய; உறைப்புடை அடியார்’ எனவும்,‘உறைப்புடை
அடியார்க்குக்  கீழ்க்கீழாய் உறைத்தலாவது சேவடி’  எனவும் உரைக்க.
கீழ்க்கீழாய்   உறைப்பவரது,   அடியார்க்கு   அடியராயும், அவர்க்கு
அடியராயும்  நிற்றலில்  உறுதியுடையராதல், ‘‘நீறு’’ என்றது, புழுதியை.
பிறப்பர்-பிறப்பவர்.


மேல்