1. திருவிசைப்பா
3. கோயில்
27. | ‘செழுந்தென்றல், அன்றில், இத் திங்கள், கங்குல், திரைவீரை, தீங்குழல், சேவின்மணி எழுந்தின்றென் மேற்பகை யாட வாடும் எனைநீ நலிவதென் ! என்னே ! ’ என்னும் ; ‘அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட் கரசுக் கரசே ! அமரர்தனிக் கொழுந்தே! ’ என்னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும் ; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (5) |
27. அன்றில், துணைபிரியாப் பறவை. திங்களைக்காட்டி, ‘‘இத்திங்கள்’’ என்றாள். திரை வீரை- அலைகளையுடைய கடல். சே-எருது. தென்றல் முதலியவை காமநோய் கொண்டாரை வருத்துவன. பகையாடுதல்- பகைகொண்டு நிற்றல். அழுந்தா மகேந்திரம்- அழியாத மகேந்திர மலை. ‘‘மகேந்திரத்து’’ என்றதனை, பின் வரும் தொடர் ஒருபெயர்த் தன்மைப்பட்டு நின்று முடிக்கும். ‘‘புட்கரசு’’ என்றது, கலுழனை; அதற்கு அரசன் திருமால், ‘‘கொழுந்து’’ என்றது, ‘தலையாயவன்’ என்னும் பொருட்டு. |
|