42. செக்கர்-செவ்வானம். உவமை இரண்டற்கும் பொருள், அம்பலவர். சொக்கர்-அழகர். ‘சொக்கராகிய அம்பலவர்’ என்க. சுருதி-வேதப்பொருள்; ஆகுபெயர். எக்கர்- செருக்கு மிக்கவர். ‘‘எக்கராம் அமண் கையர்’’ (திருமுறை 3, 39, 11,) என வந்தமை காண்க. குண்டு - கீழ் இனம். ‘குண்டர்’ என்பதும் பாடம். மிண்டர்-வன்கண்ணர். எத்தர்-வஞ்சிப்பவர். பொக்கர்-பொய்யர். |