150. ‘சொல் முறை நவில்’ என மாற்றி, சொற்களை, ஒலிக்கும் முறைப்படி சொல்கின்ற’ என உரைக்க. உணராச்சூழல்-எட்டலாகாத இடம். ‘‘கல் நவில்’’ என்றதில் நவில். உவம உருபு. கண்ணில் அகப்பட்டமை பற்றி, அதனை வலையாக உருவகித்தார். பெரியது-பெரியதொரு கருணை. உளதே-உண்டோ. ஆரணத்துள் அகப்படாமை அவை சொல்வடிவாதலாலும், கண்வலைப்பட்டமை அதனைச் செலுத்துகின்ற உணர்வின் தூய்மையாலும் என்க. மின் நவில்-ஒளிமிகுந்த. வாய்தல்-வாயில் மாடம், கோபுரம். பொன் நவில்-பொன் மிகுந்த. புரிசை-மதில். ‘வாய்தல்’ மாடம், புரிசை இவைகளையுடைய வீதி’ என்க. |