131. ‘துகிலையும் இடையையும், குழலையும் உடைய தெரிவை’ என்க. இவ்வாறு ஓதினாரேனும் ‘தெரிவை துகில்தளர்ந்து, இடை தளர்ந்து, குழல் அவிழ்ந்து இருந்த பரிசு கண்டு இரங்காய்’ என்றலே கருத்தாதல் உணர்க. முரிந்த நடை - அசைந்த நடை. வழங்கு ஒலி - மத்தளம் முதலிய வாச்சியங்கள் தருகின்ற ஓசை. திருந்து விழவு - திருத்தமாய் உள்ள விழாக்கள். அணி - அழகு செய்கின்ற. |