159. செங்கணா-திருமாலே. போற்றி-வணக்கம். திசைமுகா-பிரமதேவனே சிவபுர நகருள் வீற்றிருந்த அங்கணா-சிவனே. அமரனே-தேவகூட்டத்தினனே, அமரர்கள் தலைவனே-இந்திரனே. சிவபெருமான் ஒருவனே இவர் யாவருமாய் நின்று அருள்செய்தல் பற்றி இவ்வாறு கூறினார். ‘‘தங்கள் நான்மறை நூல்’ என்றதனால், திருச்சாட்டியக்குடியில் உள்ளோர் அந்தணர் என்பது பெறப்படும். |