216. சலம் - நீரின்கண். பொன் - அழகு. தாழ்ந்து எழுந்து - ஆழ வேரூன்றி வளர்ந்த. தடம் - குளத்தின்கண். ‘தடமும்’ என்பது பாடம் அன்று, தடம் புனல்வாய் -மிக்க நீரின்கண் உள்ள. ‘அத் தடம்புனல்வாய்’ எனச் சுட்டு வருவிக்க. அலம்பி - கிண்டி. புலம்பி - முறையிட்டு். தானவர்-அசுரர். பொற் கூத்து - பொன்போலச் சிறந்த நடனம், சிலம்பு- ஒலிக்கின்ற. இதனுள்ளும், ‘‘அணி, சிந்தை’’ என்பன கூன். |