254. ‘அன்னைமீர், என் நேசனை, அவன் அணி நீற்றை என் முலைக்கு அணியுமாறு, அவன் மலர்ப் பாதங்களைத் தழுவிச் சேர்வன்கொலோ’ எனக் கொண்டு கூட்டுக. ‘‘அன்னைமீர்’ என்றது, கைத் தாயரை. அணி-அழகு. பிறராயின் சந்தனகளபங்களைப் பூசிச் சேர்வர் இவன் திருநீற்றையே பூசிச் சேர்வான். ஆதலின், ‘‘அணிநீறு அணிய’’ என்றாள். வங்கம் மரக்கலம். ஏர்வு-எழுச்சி போல், அசைநிலை. ‘புவனேசன் என்பது, போனேசன் எனமருவிற்று’ என்பாரும், பிற உரைப்பாரும் உளர். |