பாட்டு முதற்குறிப்பு அகராதி

1. திருவிசைப்பா

3. கோயில்

30.

‘சேவேந்து வெல்கொடி யானே ! ’என்னும்;
   ‘சிவனே! என் சேமத் துணையே !’ என்னும்:
‘மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
   வளர்நாய கா ! இங்கே வாராய் ’ என்னும்;
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
   புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே! என் னும், ‘குணக் குன்றே!’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.            (8)
 

30.  சே ஏந்து - எருதைக்கொண்ட. சேமத் துணை -பாதுகாவலான
துணை. மா ஏந்து-விலங்குகளை யுடைய.  


மேல்