முதலியோரது உலகங்களை, போர்த்த-பெற்றுள்ள. தம் பெருமை-அவற்றது பெருமைகள் பலவும், ‘சிறுமையாய்ப்புக்கு ஒடுங்கும் புணர்ப்பு’ என்க. ‘புணர்ப்பு’ என்றது. ஆற்றலை, ‘எல்லா உலகங்களின் பெருமைகளூம் தனது ஆற்றலுள்ளே மிகச் சிறியனவாய் ஒடுங்கத் தக்க பெரியோன்’ என்றவாறு. அமரித்து-போரிட்டு ; ‘நான் முன்னே, நான் முன்னே என்று ஒருவருக்கு முன்னே ஒருவராய் முற்பட்டு வந்து’ என்பதாம். ‘கடல்போல இடுகின்ற தீர்த்த நீர்’ என்க. திரை-அலைவீசுகின்ற. ‘அமரரும், பிறரும் தூய நீரால் திருச்சிற்றம்பலத்தில் இறைவனை வழிபடுகின்றனர்’ என்றபடி. ‘‘பிறர்’’ என்றதும், வானுலகத்தவரை. |