92. களபம்-குழம்பு. துதைந்த-செறிந்த. ‘மேனி முழுதினும் வெண்பொடி ஆடும் உரு’ என்க. தவள வெண்பொடி, ஒரு பொருட் பன்மொழி ; ‘மிகவும் வெள்ளிதாகிய பொடி’ என்க. தழல்உரு- நெருப்புப் போலும் வடிவம். நெருப்பு, வண்ணம் பற்றி வந்த உவமை. உருவிற் பொலிந்து - வடிவத்தோடு விளங்கி. இந்தன விலங்கல்-விறகு மலை. ‘விலங்கலாய்’ என ஆக்கம் வருவித்து, அதனை, ‘‘எறி’’ என்பதனோடு முடிக்க. எறி புனம்- வெட்டப்பட்ட காடு. ‘ஓத்து’ என்றதனை ‘ஒப்ப’ எனத் திரிக்க. ஒப்ப-ஓத்து விளங்குமாறு, மாடத்துக்கண் என உருபு விரிக்க. |