161, தாள் தரும் பழனம் - முயற்சியை (உழவை) உள தாக்கும் வயல்கள். இதில் டகரஒற்று விரித்தல். ‘பழனத்தையும், பொழிலையும், படுகரையும், தண்டலையையும் உடைய சாட்டியக் குடி’ என்க. ‘‘காட்டிய பொருளையுடைய கலை’’ என்றது. ‘‘பொருளைக் காட்டிய கலை’ என்றபடி. பொருள் - மெய்ப்பொருள். ‘‘ஈரைந்தும் மாட்டிய’’ என்றது, இரண்டாவதன் தொகை. மாட்டிய - பொருத்திய. ‘‘வானுலகு’’ என்றதன்பின், ‘உளதாவது’ என்பது சொல்லெச்சமாய் நின்றது. |