82. ‘‘தாயின்’’ என்றதில் இன், சாரியை. இனி இதனை உருபாக்கி, ‘நேர் நின்று இரங்கும்’ என உரைத்தலும் ஆம். ‘‘தலைவ, துணைவ’’ என்ற விளிகட்குப் பின்னர் நின்ற ஓகாரங்கள் முறையீடு குறித்து நின்றன. வாயின் ஏர் அரும்பு-மகளிரது வாய்போல எழுச்சி விளங்குகின்ற. மணி முருக்கு-அழகிய முருக்க மலர். நேர் தீயின் அரும்பு-அதன் எதிராக நெருப்புப்போலத் தோன்றுகின்ற. |