20. கடை-வாயில், காவல் - தடை; தடுக்கப்படும் இடம். மோதி-மோதுதலால். ‘முன்றிலின்கண் பிறங்கிய’ என்க. ‘பெரும்பற்றப் புலியூர்க் கூத்தா’ என இயைக்க. இது, வருகின்ற திருப்பாட்டிற்கும் ஒக்கும். ‘செரு வில், மேரு வில்’ எனத் தனித்தனி இயையும். ‘மேருவாகிய வில்லினால் முப்புரத்தின்கண் தீயை விரித்த’ என்க. விரித்த-பரவச்செய்த. கருவடி குழை - பெரிய நீண்ட குழை. ‘குழைக்காதினையுடைய, அமலமாகிய முகம்’ என்க. அமலம்-தூய்மை; ஒளி. |