62. ‘குலம்’ என்பது ககரம் பெற்று, “குலகம்” என வந்தது; ‘கூட்டம்’ என்பது பொருள். அம்மையை வேறு கூறியது, 'அவளோடு உடனாய் நின்று காட்சி வழங்கும் அவன்’ என்பது உணர்த்துதற்கு. கொடுத்து - கொடுத்தமையால், “வெண்ணீறு” என்றதற்கு, ‘அதனைப் பூசுதலும்’ எனவும், “அஞ்செழுத்து” என்றதற்கு. ‘அதனைச் சொல்லுதலும்’ எனவும் உரைக்க. “வேந்தன்” என்றது, சிவபிரானை. |