83. துந்துபி முதலியன வாத்தியங்கள். அவை அவற்றது ஒலியைக் குறித்தன. வான் இயம்ப-வானளவும் சென்று ஒலிக்க. முழவம்- மத்தளம். அந்தியின் மறை - அந்திக் காலத்திற் சொல்லப்படுகின்ற மந்திரங்களையுடைய (நான்கு வேதங்கள் என்க). மறைப் பொருள்-இரகசியப் பொருள்கள். ‘மறைப் பொருள் அரும்பும்’ என இயையும். |