225. ‘நீரொடு பூஅவை தூவி’ என மாற்றுக. ஆவி-பிராண வாயு. அமர்ந்து-விரும்பி. ஊறிய அன்பு-சுரந்த அன்பு. ‘சுரக்கின்ற என்னும் நிகழ்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. மேவ-விரும்ப; என்றது. ‘விரும்பிப் பாட’ என்றவாறு. மேவுவர்-சேர்வர். இதனுள், ‘அமர்ந்து,விடை’ என்பன கூன். |