15. ‘தெருவில்’ என்பதனை முதலிற் கொள்க. ஓத்து-வேதம். ‘கடல் ஒலிபோல’ என உவம உருபு விரிக்க. ‘பெரும் பற்றப் புலியூரின்கண் திகழும்’ என்க. ‘சீர்’ என்பது தாள அறுதி. இலயம்- தாளம். ‘‘இயல்பின்’‘ என்றதில் இன்,சாரியை. ‘இயல்பினோடு’ என மூன்றாவது விரிக்க. மா-சிறந்த, மணிக் குறங்கு-அழகிய துடை. |