224. தொறுக்கள்-பசுக்கூட்டங்கள். கமல மலர்,வயலில் உள்ளவை. உழக்க-மேய. பாய்தர-மேல்நின்று விழ. மறுக்கம்-வருத்தம். ‘பசுக்களின் கால்களால் மிதிபட்டும். கருப்பஞ்சாற்றின் வீழ்ச்சியால் தாக்குண்டும் கயல் மீன்கள் வருந்துவவாயின’ என்பதாம். ‘மடைக்கண் பாய்’ என உருபு விரித்துரைக்க. வார் சிகை-நீண்ட சடை. ‘‘முகிழ்த்த’’ என்றதன்பின்னர் நின்ற வகரமெய் விரித்தல். ‘வாசிகை எனவும். ‘அகத்தி’ எனவும் ஓதுவன பாடம் அல்ல. ‘‘பிறைக்கொள்’’ என்றதில் உம்மை தொகுத்து, ககர ஒற்று விரிக்கப்பட்டது. இதனுள், ‘மடை,பிரி’ என்பன கூன். |