3. தத் பரம்பொருள்- வேதத்துள், ‘தத்’ என்னும் சொல்லால் குறிக்கப்படும் பரம்பொருள். ‘தன் பரம்’ எனப் பிரித்து, தனக்கு மேலான-உணர்கின்ற பொருட்கு (உயிர்கட்கு) மேலாய பொருள்’ என உரைத்தலும் உண்டு. சசிகண்டன்- நிலாத் துண்டத்தை யணிந்தவன். இப்பெயர் விளியேற்றது. சீகண்டன் என்பது முதல்குறுகி, விளியேற்றது. சிகண்டம். முடி என்பாரும் உளர். சாமகண்டன்- கருமையான கழுத்தை உடையவன்; ‘சாமவேதம் முழங்கும் குரலை உடையவன்’ என்றலும் உண்டு. ‘‘அண்டம்’‘ என்றது, சிதாகாசத்தை, ‘‘நற்பெரும்பொருள்’‘ என்றதில் பொருள், சொற்பொருள், உரை கலந்து -எனது சொல்லிற்சேர்த்து, அற்பன் - சிறியன், கற்பம் - ஊழிக்காலம். உலகு-அக்கால எல்லைக்குள் தோன்றி நின்று ஒடுங்கும் பொருள்கள். |