31. தர வார் புனம் - மேலான நீண்ட புனம். சுனைத் தாழ் அருவி-சுனையினின்றும் வீழ்கின்ற அருவி. ‘‘கல்’’ என்றது முழையை. மடங்கல்-சிங்கம். மடங்கல் ‘அமர்’ பொழில்’ என்க. இருள் மிகுந்திருத்தலின், முழையில் தங்கும், சிங்கம் இங்குத் தங்குவதாயிற்று. மரவு ஆர் பொழில்-குங்கும மரம் நிறைந்த சோலை. வேங்கை-வேங்கை மரம்’ இதனை வேறு கூறினார். மலை நிலத்திற்குச் சிறந்த மரமாதல் பற்றி. மழை-மேகம் ‘ஏங்கும்’ என்பதும் பாடம். ‘புனம், அருவி, பொழில், வேங்கை முதலிய எங்கும் மேகங்கள் தவழ்கின்ற மகேந்திர மாமலை ’ என்க. ‘சுரவன்’ என விரித்தல் பெற்று விளியேற்று, ‘சுரவா’ என நின்றது. சரன்-தேவன் ‘‘குரவன்’’ என்றது. ‘தந்தை, தாய், அரசன், ஆசிரியன்’ என்னும் அனைத்துப் பொருளையும் குறிக்கும். |