61. பொருள் - மெய்ப்பொருள். நேர்ந்த - தெளிந்த, அருள் நேர்ந்து - அருளைத் தர இசைந்து தெருள் நேர்ந்த சித்தம்- இவளது துன்பத்தைத் தெளிய உணர்ந்த மனம். ‘மனம்’ என்பதை, ‘உனது மனம்’ என உரைக்க. வலியவா - கடிதாய் இருந்தாவாறு. இதனை இறுதியில் வைத்து, ‘வருந்தத்தக்கது’ என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. இதனுள், ‘தருணேந்து சேகரனே’ என்பது ஒன்றும் தலைவி கூற்று. ஏனைய, செவிலி கூற்று. |