வள்ளியது தன்மையைக் காட்டிலும், மறத்தொழில் வார்த்தையும் உடையன் - பகைத்தொழிலையுடைய சொற்களையும் இவள் ( தலைவி) கூற்றில் உடையனாகின்றான். தன் கணவனை மற்றொருத்தி காதலித்தலை அறியின் அவளிடத்தில் வள்ளியம்மைக்குப் பகையுண்டாதல் இயல்பாதலின், ‘அவளினும் பகை வார்த்தையை உடையன்’ என்றாள். ‘மாலை கொடாமையேயன்றி’ என்னும் பொருள் தருதலின், ‘‘வார்த்தையும்’’ என்ற உம்மை இறந்து தழுவிய எச்சம். மடங்கல் - சிங்கம். ‘‘அமுதத்தினை’‘ என்றதன் பின்னர், ‘கண்டு’ என ஒருசொல் வருவிக்க |