| 
 8. திறம்பிய-மாறி  வருகின்ற.  ‘‘சில’’  என்றது,  இழிபு கருதி.‘நெறிக்கண்ணே’  என்பது  ‘நெறிக்கே’  என  வந்தது உருபு  மயக்கம்.
 ‘நெறிக்கே    நின்று’   என   ஒருசொல்   வருவிக்க.   பிறவியுடைய
 தெய்வங்களைப்   பிறவி   இல்லாத   கடவுளாகக்  கருதுதல்  மயக்க
 உணர்வாகலின்,  ‘திகைக்கின்றேன்’’  என்றார்.  ‘‘நிறைந்த’’ என்றதற்கு,
 ‘நிறைந்தாற்போன்ற’   என   உரைக்க.   நிகழ்வித்த-வாழச்    செய்த.
 திறம்-வகை.   ‘திறமாக,  புறமாக’  என  ஆக்கம்  வருவிக்க.  கண்டு
 வகுத்து. ‘அருந்தவர், நால்வர்’ என்க. என்னை?
 ‘‘நன்றாக நால்வர்க்கு நான் மறையின் உட்பொருளைஅன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடி’’
 (திருவாசகம்  -  திருச்சாழல்-16.)     என்பது   முதலாக அருளிச்செய்யப்படுதலின்.    அருந்தவர்க்கு    அரசு,    ஆசான்   மூர்த்தி.
 புறம்-வேதாகமங்கட்குப் புறமாம்படி. ‘‘சமண்’’  என்றது, குழூஉப் பெயர்.
 பொய்கள்-மயக்க  நெறிகள் கண்டாயை- உளவாக்கிய  உன்னை. சமண
 பௌத்த மதங்களையும் சிவபெருமானே உண்டாக்கினான் என்பதை,
 ‘‘துணைநன்மலர் தூய்த்தொழுந் தொண்டர்கள் சொல்லீர்பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி
 இணையில்இரும் பூளை இடங்கொண்ட ஈசன்
 அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே’’
 
 |