| 
 9. இத் திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை.   ‘‘தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம்தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ’’
 (திருச்சாழல்-5.)
 எனவும்,   ‘‘நாமகள் நாசி சிரம்பிர மன்பட’’(திருவுந்தியார்-13.)
 எனவும்  திருவாசகத்  துள்ளும்  போந்தமை காண்க. ‘எச்ச வன்தலை’எனவும்  பாடம்  ஓதுப. ‘‘புருவம் நெறித்தருளிய’’ என்றது, ‘வெகுண்ட’
 என்றவாறு.  ‘புலித்தோல்  ஆடைமேல் அக்குஅணி ஆடஆட ஆடும்
 சொக்கன்’  என்க. அக்கு அணி - எலும்பு மாலை. சொக்கன்-அழகன்.
 தொடர்தல்-இடைவிடாது பற்றுதல்.
 |