126. நீ வாராதொழிந்தாலும் - நீ இவள்பால் வாராவிடினும்.‘ ஏழை நின்பாலே விழுந்து’ என மாற்றி, ‘‘விழுந்து’ என்றதனைத் திரித்து, ‘எளியளாகிய இவள் நின்னிடத்தே வந்து விழ’ என உரைக்க. ‘குவளை மலரும் கோவாத மணிமுத்துச் சொரிந்தன’ என உம்மையை மாற்றி உரைக்க. குவளை மலர்-கண் ; உருவகம். ‘கோவாத மணியாகிய முத்து’ என்றது, கண்ணீரைக் குறித்தல் வெளிப்படை. ஆவா, இரக்கக் குறிப்பு. தென்-அழகு. |