6. ‘‘நீறு அணி பவளக்குன்றம், நெற்றிக்கண் உடையதோர் நெருப்பு’’ என்ற இரண்டும் இல்பொருள் உவமைகள். நின்ற -நிலைபெற்ற. ‘நின்ற நெருப்பு’ என இயையும். ‘‘நெருப்பு’’ என்றது. அஞ்ஞானத்தால் அணுகலாகாமைபற்றி,வேறு அணி புவனபோகம் - வேறுபட்ட நிரையாகிய உலகங்களில் உள்ள நுகர்ச்சிகள். ‘‘யோகம்’’ என்றது. ‘முத்தி’ என்னும் பொருட்டாய், அந்நிலையில் விளையும் இன்பத்தைக் குறித்தது; எனவே , இவ்விரண்டாலும், இறைவன் பந்தமும், வீடுமாய் நிற்றலைக் குறித்தவாறாதல் அறிக. அற்புதம் - வியப்பு; புதுமை. ‘அம் பொன்னால் செய்த’ என மூன்றாவது விரிக்க; ‘‘தூயசெம் பொன்னினால்-எழுதி மேய்ந்த சிற்றம்பலம்’’ என்று அப்பரும் அருளிச்செய்தார். இசைதல்-கூடுதல். |