96. நீலம்-நீலரத்தினம், நித்திலம்-முத்து. நிரைத்து-வரிசைப்பட வைக்கப்பட்டு. முறுவல்-நகைப்பு. ‘‘திருமுகம்’’ என்றதன்பின், ‘இவ்வாறாகலின்’ என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ‘‘கோலமே, அழகிதே’’ என்ற ஏகாரங்களில் முன்னது அசைநிலை : பின்னது தேற்றம். அச்சோ, வியப்பிடைச் சொல், குழைவர்-மனம் உருகுவார்கள். |