163. ‘அகலாது’ என்பது, ஈறு குறைந்தது. ‘நெஞ்சில் புகுந்தன’ என இயையும். பொன் - அழகு. திரு - மேன்மை. போந்தன இல்லை-புறத்துச் செல்லவில்லை. ‘இங்ஙனமாகலின் எனக்கு மற்று உறவு என்’ என்க. ‘வடவாறு’ என்பது தஞ்சாவூரின் வடக்குப்புறத்தில் ஓடும் ஓர் யாறு. இடு-அதன் கண் அமைக்கப்பட்ட. புனல் மதகு-நீரையுடைய வாய்க்கால் தலைமதகு. ‘நீர் சூழ்’ என இயையும், கிடங்கில்-அகழிபோல. ‘‘இவர்க்கு’’ என்பது, முன் உள்ள ‘அகலா, புகுந்தன, போந்தன வில்லை’ என்பவற்றோடு முடியும். நான்கனுருபு, ‘இவற்கு இஃது இயல்பு’ என்றல்போலப் பண்புத் தற்கிழமைக்கண் வந்தது. |