203. நெடியான்-திருமால், முடியால்-ஒருவர் மகுடத்தோடு. முடிகள் மோதி-மற்றவர் மகுடங்கள் தாக்குதலால். உக்க-சிந்திய. முழுமணி-குற்றமற்ற இரத்தினம். கடி-நறுமணம். இத்திருப்பாடற் பொருளோடு. ‘‘வந்திறை யடியில் தாழும் வானவர் மகுட கோடிப் பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பை யாக்கும் நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்’’ என்னும் திருவிளையாடற் புராணச் செய்யுளை ஒப்புநோக்கிக் காண்க. |