3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
85. | நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும் விரிசடை யடிகள்தங் கோயில் | | அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத் தகம்படி மணிநிரை பரந்த செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (6) |
85. அகம், அந்நெஞ்சின் அகம். ‘நிலைமையோடு கூடி’ என ஒருசொல் வருவிக்க. முதற்றொட்டு, ‘‘எழுந்த’’ என்பது காறும் உள்ளவை, வெஞ்சுடருக்கு அடையாய், இல்பொருள் | உவமையாக்கின. வெஞ்சுடர்-பகலவனது வெப்பமான கதிர்கள். சுடர்வபோன்று-வீசுவனபோன்று. துளும்பும்-விரிகின்ற. புரிசை-மதில். ‘‘புரிசையும், அகழியும் சூழ்ந்த வட்டத்து அகம்படி’ என்க. அகம்படி-உள்ளிடத்தில். மணி நிரை பரந்த செஞ்சுடர்- மாணிக்கங்கள் பரந்து கிடத்தலால் உண்டாகின்ற செம்மையான ஒளி. அரும்பும்-தோன்றுகின்ற. |
|