255. காய் சினம், இன அடை. மால் விடை-பெரிய இடபம். ‘திருமாலாகிய இடபம்’ எனலும் ஆம். காமரு-விரும்பத் தக்க. சீர்-அழகு. ‘சீர்த் தில்லை’ என இயையும். தேசம் மிகு புகழ்-நில முழுதும் பரவிய புகழ். ‘‘புகழோர்’’ என்றது, தில்லைவாழ் அந்தணரை. ‘எவ்வுயிர்க்கும் இறைவன் என்று ஏத்துவன்’ என்றது, ‘அவனது பெருமை யறிந்து காதலித்தேன்’ என்றவாறு. ‘இனி அவனைத் தலைப்படுதல் என்றோ’ என்பது குறிப்பெச்சம். இறைவன்-தலைவன். |