4. பெருமையின் - பெருமையாய் உள்ள நிலையிற்றானே. ‘‘கருமையின் ஒருமையின்’’ என்பவற்றிற்கும் இவ்வாறு உரைக்க. ‘‘ஆய்’’ என்றதனை, ‘‘சிறுமை’’ என்றதற்கும் கூட்டுக. வெளி-வெண்மை. ‘‘களைகண்ணே’’ என்பதில் ணகர ஒற்று விரித்தல், களைகண்-பற்றுக்கோடு; ‘கொழுநன்’என்பதும் இப்பொருட்டு. ‘‘மறை’ என்றது பெயராகலின், சாரியை உள்வழித் தன்னுருபு கெட்டது. (தொல், எழுத்து 157). எனவே, ‘அருமையையுடைய மறை’ என்பது பொருளாயிற்று. |