145. ‘‘முத றேவர்’’ என்பதல்லது. ‘முதற் றேவர்’ என்பது பாடமாகாது. ஏம்பலித்து-வருந்தி, தேம் புனற் பொய்கை-தேனொடு கூடிய நீரையுடைய பொய்கையின் நீரை. பொய்கை, ஆகுபெயர். தேறல்-தேன். ‘‘ஒழுகும்’’ என்றது, ‘பணை’ சோலை’ என்னும் இரண்டனையும் சிறப்பித்தது. பணை-வயல், ‘பணை வீதி, சோலை வீதி’ எனத் தனித்தனி முடிக்க. |