155. பதிகம்-(தாம் பாடிய) பாடற் றொகுதி. காந்தர்ப்பர்-கந்தருவர்; இசை பாடுவோர். கதியெலாம் அரங்கம்-அவர் சேரும் இடமாவன எல்லாம் அம்பலம். பிணையல் மூவுலகு-மாலைபோல அமைந்த மூன்றுலகங்கள் ‘மூவுலகிலும்’ என உம்மை விரித்து, ‘மூவுலகிலும் ஒலிசெயும்’ என முடிக்க, சதியில்-அடிபெயர்த்தலில், ஆர்கலியில்-கடலைப்போல. ‘ஆர்கதியில்’ என்பது பாடம் ஆகாமை யறிக. கமல வர்த்தனை-பதுமநிதி. உள்ளத்தில் உள்ள அன்பையே தாம் விரும்பும் பொருளாகக் கொள்ளுதலின், சாட்டியக்குடியாரது இதயங்களை இவ்வாறு கூறினார். ‘வர்த்தனை ஆசனம் ’ எனவும் உரைப்பர். |