75. பரிந்த - வீசுகின்ற. சுடர் - விளக்கு. குழவி - கொழுந்து. சிந்துரம் - செந்நிறப் பொடி. மணி -மாணிக்கம் சுந்தரத்து அரசு - அழகின் தலைமை. முருகன் விற்படையும் உடையனாதலைக் கருதி, ‘‘சிலைக்கை மைந்தன்’’ என்றான். அம் சொல் - அழகிய சொல்; இஃது அதனையுடையாள்மேல் நின்றது. ‘ஐயுறும்’ என்றது முற்று. ‘வகையானே’ என உருபு விரிக்க. ‘அம் சொலாள், மையல் கொண்டு, மைந்தனை, சுந்தரத்து அரசாகிய இது, சுடரோ, பரிதியோ... ...என்ன வகைவகையாக ஐயுறும் ’ என்க. |