66. மான் - மான்போன்றவளாகிய என்மகளது. ஏர் கலை - அழகிய உடை. வழக்கு உண்டே - நீதி உண்டோ. ஆனே அலம்பு - ஆக்களே, ஒலிக்கின்ற; ஆவடுதுறை என்க. ‘‘ஆனே’’ என்றதனை இறைவனுக்கு ஏற்றி உரைப்பாரும், ‘அவ்விடத்தே’ என உரைப்பாரும் உளர். ‘ஆவடு துறைக் குன்றமே’ என இயைக்க. இப்பாட்டு முழுதும் செவிலி கூற்று. |