121. மூலம்-முதல். இறைவன் மூலமும், முடிவுமாதல் உலகிற்கு. அவற்றைத் தனக்கு இலனாதலின், ‘‘முடிவிலா முதலாய்’’ என்றார். இங்கு ‘‘முதல்’’ என்றது, ‘பொருள்’ என்னும் பொருட்டு. ஆலையம் பாகு-கரும்பு ஆலையிடத்து உள்ள பாகு. அம், சாரியை. ‘சொல்லையுடைய கருவூர்’ என்க. ‘கருவூரது மாலை’ என இயையும். சீலமா-ஒழுக்கமாக (கடமையாக)க் கொண்டு, ‘நிற்பார்’ என்பது, துணிவு பற்றி,‘‘ நின்றார்’’ என இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. |