185.‘‘எத்திசையும்’’ என்பதை முதலிற் கொள்க. வயிரமணி, இருபெயரொட்டு, தொத்து-பூங்கொத்து. இது தூண்டு விளக்குக்களுக்கு உவமை. ஏய்ப்ப - பொருந்த வைக்க; ஏற்றி வைக்க. ‘ஏய்ப்ப ஏத்தும்’ என இயையும். ‘‘அத்தனுக்கும்’’ என்ற உம்மை சிறப்பு. ‘அவ்வம்பலமே’ சுட்டு வருவிக்க. ‘‘அம்பலமே’’ என்ற ஏகாரம், ‘பிறிதிடம் இல்லை’ என்னும் பொருட்டாய், அம்பலத்தது சிறப்புணர்த்தி நின்றது. |