195. மின்னார்-பெண்கள். மேல்-மாடங்களின் மேல் நிலையில், ‘‘விளங்க’’ என்பது, ‘‘சூழ’’ என்பதனோடு முடிய, ‘‘சூழ’’ என்பது, ‘‘நின்ற’’ என்பதனோடு முடியும். பொன்னார் குன்றம், பொன்னம்பலத்திற்கு உவமை. ‘‘என்னா’’ என்பதற்கு, ‘மருளும்’ என்று ஒருசொல் வருவித்து முடித்து, ‘அதனை’ மருளும் அம்பலம்’ என இயைத்து முடிக்க, ‘‘தென்னா’’ என்பது ஒலிக்குறிப்பு. |