211. ஒடுக்கள், எண்ணிடைச் சொல். ‘மண்ணின்கண் அளவும் (பொருந்திய) மனிதர்க்கும், விண்ணின்கண் அளவும் வானவர்க்கும்’ என நிரல்நிரை வந்தது. கண் - களைகண்’
பற்றுக்கோடு ‘எனக்கு அவ்வாறு ஆகாதொழிந்தமையால்; என்க. ‘அண்ணல்’ என்பது னகர ஈறாய்த் திரிந்து விளியேற்பது பிற்கால வழக்கு. அண்ணல்-பெருமை யுடையவன்; தலைவன். அண்ணாந்து-ஆகாயத்தை நோக்கி நின்று. அலமந்து-வருந்தி.