69. மால் உலாம் மனம் - மயக்கம் நிகழ்கின்ற மனம். ‘‘தந்து’’ என்றது, ‘என் மனத்தை அத்தன்மையதாக்கி ’ என்றவாறு. சங்கம் - சங்க வளையல், தேவர் அனைவரையும் சேனைகளாக்கித் தான் அவற்றுக்குப் பதியாய் நிற்றலின், ‘தேவர் குலமுழுது ஆளும் குமரவேள்’ என்றாள். குரா, ஒரு மரம். ‘‘ என் சேந்தன்’’ என்றாள், காதல் பற்றி. |