| 
 257.        வார்-தேன் ஒழுகுகின்ற. அணி-அழகிய. ‘நறுமலரை      வண்டுகெண்டி   (கிளறி)ப்   பாடுகின்ற  பஞ்சமப்       பண்’  என்க.  ‘‘மாலை’’
 இரண்டனுள்   பின்னது        மாலைக்  காலம்.  ‘பஞ்சமமும்,  செண்பக
 மாலையும்,       மாலைக்  காலமும்  ஆகிய  இவை  நம்       வனமுலைகள்
 மெலியுமாறு   வந்து        வந்து  நம்மை  மயக்கும்’  என்க.       ஆல்,  ஓ
 அசைநிலைகள்.    சீர்        அணி-அழகைக்கொண்ட.   ‘‘ஆர்   எனை
 அருள்புரிந்து        அஞ்சல்   என்பார்’’  என்றதை       இறுதியிற்  கூட்டுக.
 ‘‘எனை’’  என்றது,  ‘‘அஞ்சல்       என்பார்  என்பதனோடு முடியும். என்
 ஆதரவு        ஆவியின்   பரம்  அன்று-எனது       காதல்  என்  உயிரின்
 அளவினதன்று;    மிக்கது,  ‘‘சிறுகோட்டுப்              பெரும்பழந்    தூங்கி
 யாங்கிவள்-உயிர்தவச்  சிறிது         காமமோபெரிதே’’                  என்னும்
 குறுந்தொகைப்  பகுதியை       நோக்குக  (18). ஆதரவு-விருப்பம்; காதல்.
 ‘அஃது      என்னால் தாங்கும் அளவினதாய் இல்லை’ என்றபடி.
 |