14. வரம்பு இரி-கரைக்குமேல் பாய்கின்ற. மிளிர்-பிறழ்கின்ற. கரும்பு, பின்னர்க் கூறப்படுகின்ற செந்நெல் வயலில் உள்ளது. மாந்திடும்-உண்கின்ற. மேதி-எருமை. பிரம்பு இரி- பிரப்பம்புதரில் செல்கின்ற, ‘செந்நெற் கழனியையுடைய பழனம்’ என்க. பழனம் - மருத நிலம். ‘சிரம் புரைமுடி - தலையின்கண் உயர்ந்த முடியை அணிந்த. முறையால் - தமக்கேற்ற வரிசையில். ‘மாந்து மேதிகள் சேர்’ ‘பரம்பிரி’ ‘கழனி செங்கழுநீர்’, ‘சிரம்புணர்முடி’ என்பனவும் பாடங்கள். |