26. வெறி- செருக்கு. மறி ஏறு-மான் கன்றுகள் பொருந்திய. நெறி-வீடுபெறும் வகை, சாதனம். பின்னர் வரும், ‘‘குறி’’ என்பது, இதனால் எய்தும் பயன், ‘‘நினைக்கின்ற, நீதி’’ என்னும் இரண்டும், ஒருசொல் தன்மைப்பட்ட ‘‘வேதாந்த நிலைக்குறி’’ என்பதனை விசேடித்தன. நீதி-எய்தும் உரிமை. வேதாந்த நிலைக்குறி- வேதத்தின் முடிநிலையாகிய குறிக்கோள். |