சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

15. திருச்சாட்டியக்குடி


155.
  

பதிகம்நான் மறை ; தும் புருவும்நா ரதரும்
   பரிவொடு பாடுகாந் தர்ப்பர் ;
கதியெலாம் அரங்கம் ; பிணையல்மூ வுலகில்
   கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
   தமருகம் ; சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் ; கமலவர்த் தனைஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே .                (4)
 

155.    பதிகம்-(தாம் பாடிய) பாடற் றொகுதி. காந்தர்ப்பர்-கந்தருவர்;
இசை  பாடுவோர்.  கதியெலாம்   அரங்கம்-அவர்  சேரும் இடமாவன
எல்லாம்   அம்பலம்.   பிணையல்   மூவுலகு-மாலைபோல  அமைந்த
மூன்றுலகங்கள்  ‘மூவுலகிலும்’  என   உம்மை  விரித்து,  ‘மூவுலகிலும்
ஒலிசெயும்’     என       முடிக்க,        சதியில்-அடிபெயர்த்தலில்,
ஆர்கலியில்-கடலைப்போல.   ‘ஆர்கதியில்’  என்பது பாடம் ஆகாமை
யறிக.  கமல  வர்த்தனை-பதுமநிதி.    உள்ளத்தில் உள்ள அன்பையே
தாம்   விரும்பும்  பொருளாகக்   கொள்ளுதலின்,  சாட்டியக்குடியாரது
இதயங்களை  இவ்வாறு  கூறினார்.    ‘வர்த்தனை  ஆசனம் ’ எனவும்
உரைப்பர்.  


மேல்