சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

2. கோயில்


21.

ஏர்கொள்கற் பகமொத் திருசிலைப் புருவம்,
   பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன்
பேர்கள் ஆயிரம்நூ றாயிரம் பிதற்றும்
   பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள்கொக் கிறகும், கொன்றையும் துன்று
   சென்னிச்சிற் றம்பலக் கூத்தா!
நீர்கொள்செஞ் சடைவாழ் புதுமதி மத்தம்
   நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.             (10)
 

21.     ஏர்-அழகு, ‘‘கற்பகம் ஒத்து’’ என்றது எண்ணின் கண் வந்த
எச்சமாகலின், ‘கற்பகம் ஒத்தவனும், இருபுருவமும்,  மூன்று  கண்களும்
உடையவனும்     ஆகிய    உனது’    என    உரைக்க.    சிலைப்
புருவம்-வில்போலும்   புருவம்.   ‘‘ஆயிரம்,    நூறாயிரம்    என்றது.
அளவின்மை  குறித்தவாறு.  ‘‘பிதற்றும்’  என்றது,  அன்பு   மீதூர்ந்து
சொல்லும்’ என்றபடி, ‘‘பெரும்பித்தர்  கூடிப்  பிதற்றும்  அடி’‘  (
திருமுறை-6-6.4.)     ‘‘பித்தில     னேனும்    பிதற்றில    னேனும்
பிறப்பறுப்பாய்எம்   பெருமானே’’  (திருவாசகம்-எண்ணப்   பதிகம்-4)
என்றாற்போல  வருவன  பலவுங்காண்க.  ‘‘நீர்கொள்  சடை’’ என்றது,
உடம்பொடு  புணர்த்தலாகலின்,  நீரும்  தனித்தெண்ணப்படும். ‘‘சடை’’
என்றதனையும்  செவ்வெண்ணாக்கி  ‘அதன்கண்வாழ்   புதுமதி’  என
உரைக்க. மத்தம்-ஊமத்த மலர். நிகழ்ந்த-உலவலாயின.  


மேல்