சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


29.

‘கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
   சிலையும், கணையும், கவணும் கைக்கொண்
டுடுப்பாய தோல் செருப் புச், சுரிகை
   வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
‘நடப்பாய் ! மகேந்திர நாத ! நாதாந்தத்
   தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
கொடுப்பாய் !’ என் னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும்
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.            (7)
 

29. கடுப்பாய்-மிகுதியாய். ‘கடுப்பாய்க் கறங்க’ என இயையும். பறை,
வேட்டைப்  பறை.  கறங்க-ஒலிக்க. உடுப்பு-உடை. சுரிகை- உடைவாள்.
‘தோல்  செருப்புச்  சுரிகைகளுடன்  நடப்பாய்’  என்க.   நாதாந்தத்து
அரையா-‘நாதம்’ என்னும் தத்துவத்திற்கு அப்பால் உள்ள  தலைவனே!
முன்னைத் திருமுறைகளில்,  ‘நாதம்’  என்னும் சொல்  காணப்படினும்,
‘நாதாந்தம்’ என்னும் தொடர் காணப்பட்டிலது. பதம்-பாதம். 


மேல்