சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

4. கோயில்


38.

துணுக்கென அயனும் மாலும்
   தொடர்வருஞ் சுடராய், இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
   அம்பலத் தாடிக் கல்லாச்
சிணுக்கரைச், செத்தற் கொத்தைச்
   சிதம்பரைச், சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (4)
 

38.     ‘‘துணுக்கென’  என்பதை  ‘துணுக்கென்று’  எனத் திரிக்க.
துணிக்கெனல்-அஞ்சுதல்.   அணுக்கர்-அணுகியிருப்பவர்:    அடியவர்.
அணிய-அண்மைக்கண்  உள்ள. ‘‘செம்பொன்  அம்பலத்தாடி’’ என்றது
ஒருபெயர்த்   தன்மைத்தாய்,   ‘‘அணிய’’  என்றதற்கு   முடிபாயிற்று.
சிணுக்கர்  -  அழுகையுடையவர்.      சிவபெருமானை     இகழ்ந்து
முணுமுணுத்தலை, ‘அழுகை’ என்றார். செத்தல்-செதுக்குதல்;   பிறரைத்

துன்புறுத்துதல்’     என்க.       கொத்தை    -   குருட்டுத்தன்மை.
சிதம்பர்-வெள்ளைகள்;  அறிவிலிகள். சீத்தை - கீழ்மை. ஊத்தை-வாய்
அழுக்கு;  இஃது,  இழிந்த  சொல்  உடைமை   பற்றிக்  கூறப்பட்டது.
‘பிணக்கர்’ என்பது, எதுகை நோக்கி ‘‘பிணுக்கர்’’ என்றாயிற்று.  


மேல்