சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

4. கோயில்


43.

எச்சனைத் தலையைக் கொண்டு
   செண்டடித் திடபம் ஏறி
அச்சங்கொண் டமரர் ஓட
   நின்றஅம் பலவற் கல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
   கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண் ; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                    (9)
 

43.     செண்டடித்து-பூச்செண்டு அடித்தல்போல  அடித்து; இஃது
எளிதில்  செய்தமையை  உணர்த்திற்று.  ‘‘இடபம்  ஏறி’ , என்றதனை
முதற்கண்  வைத்து  உரைக்க.  ‘‘ஏறி’’  என்ற  எச்சம் எண்ணின்கண்
வந்தது.  ‘‘அம்பலவன்’’ என்றது ஆகுபெயராய் அவனைப் பொருளாக
உடைய   நூலைக்  குறித்தது.  கல்லா-கற்காத.  ‘கைத்தவர்’  என்பது,
‘கச்சவர்’  என்று  ஆகி,  ‘கச்சர்’  என  இடைக்  குறைந்து  நின்றது;
வெறுக்கப்பட்டவர்    என்பது   பொருள்.   ‘‘பசு’’   என்றது,   சிறு
தெய்வங்களை,  நூல், அவற்றைப் பொருளாக உடைய நூல். ‘‘கற்கும்’’
என்றது, ‘‘விரும்பிக் கற்கும்’ என்றவாறு, பிச்சர்-பித்தர்.


மேல்